ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அரசுப் பள்ளி ஊழியர் கைது - சஸ்பெண்ட்
Posted August 14, 2015 by Adiraivanavil in Labels: வெளிமாநில செய்திகள்சத்தீஸ்கர் மாநில அரசுப் பள்ளிக்குள் ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அப்பள்ளியின் பியூனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள கோப்ரா மாவட்டத்தின் உர்கா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 11 வயது மாணவியை அப்பள்ளியில் பியூனாக வேலை செய்துவரும் உமன்கிராம்(58) என்பவர் கடந்த 12-ம் தேதி பள்ளி வளாகத்துக்குள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுததையடுத்து, அவர்கள் நேற்று போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது.
news by malaimalar
0 comment(s) to... “ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அரசுப் பள்ளி ஊழியர் கைது - சஸ்பெண்ட்”