அரசு மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

Posted August 14, 2015 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று ம.தி.மு.க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


செயல்வீரர்கள் கூட்டம்

பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரில் உள்ள மண்டபத்தில் பட்டுக்கோட்டை நகர ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு முன்னாள் நகரசபை தலைவர் ஜெயபாரதி விசுவநாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். ம.தி.மு.க மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன், மாநில துணை பொதுச்செயலாளர் துரைபாலகிருஷ்ணன், தஞ்சை மாவட்ட செயலாளர் உதயகுமார், மாநில மாணவர் அணி செயலாளர் மு.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விலையில்லா பொருட்கள்

பட்டுக்கோட்டை நகரில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் விலையில்லா கிரைண்டர், மிக்சி, மின்விசிறி வழங்க வேண்டும். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை. எனவே உடனடியாக கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும். பட்டுக்கோட்டை நகரில் பொதுமக்கள் போக்குவரத்து பாதிப்பினால் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே புறவழிச்சாலை பணியை விரைவில் முடிக்க கேட்டுக் கொள்வது, பட்டுக்கோட்டை திருப்பூரில் நடைபெறும் ம.தி.மு..க மாநாட்டிற்கு பட்டுக்கோட்டை நகரத்தில் இருந்து 5 வாகனங்களில் செல்வது, பழுதடைந்துள்ள ரேஷன் கடைகளை உடனடியாக சீரமைக்க பட்டுக்கோட்டை நகராட்சியை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


0 comment(s) to... “அரசு மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்”