தஞ்சை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள்: கலெக்டர் சுப்பையன் அறிவிப்பு

Posted September 02, 2015 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள்: கலெக்டர் சுப்பையன் அறிவிப்புதஞ்சாவூர், செப. 2–
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, வடவாறு, வீரசோழன் ஆறு மற்றும் கல்லணைக் கால்வாய் உள்பட 11 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ரசாயனக் கலவையில் வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, நீர்நிலைகளும் மாசடைகின்றன. எனவே, விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக மத்திய அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது.
சிலைகள் இயற்கை பொருட்களைக் கொண்டே செய்யப்பட வேண்டும் என்பதால், மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட, ரசாயனக் கலவைப் பூச்சு இல்லாத விநாயகர் சிலைகளையே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசும்போது தண்ணீரில் எளிதில் கரையும், எவ்வித தீங்கும் விளைவிக்காத வண்ணக்கலவைகளையே பயன்படுத்த வேண்டும்.
சிலைகள் மீது சாத்தப்படும் மலர்கள், அங்கவஸ்திரம் உள்ளிட்ட வழிபாட்டுப் பொருட்களை, அவற்றை நீர்நிலைகளில் கரைக்கும் முன் அப்புறப்படுத்த வேண்டும்.
சிலை கரைக்கும் இடங்களில் திடக்கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் ஒவ்வொரு குழுவினரும், ரசாயனக்கலவை மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற பொருட்களின் தீமைகள் குறித்து கையேடு அச்சிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த விநியோகம் செய்ய வேண்டும். ரசாயனம் வர்ணம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும். கடலோரத்தில், ஏரிகளில் சிலைகளை கரைக்கக்கூடாது. கடலில் 0.5 கிலோமீட்டர் தூரம் சென்று சிலைகளை கரைக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் விநாயகர் சிலைகளை வடவாறு, கல்லணைக்கால்வாய் ஆகிய இடங்களில் கரைக்க வேண்டும். அதேபோல் திருவையாறுகாவிரி ஆறு, பாபநாசம்காவிரி ஆறு, சுவாமிமலைகாவிரி ஆறு, கும்பகோணம்காவிரி ஆறு, திருபுவனம்வீரசோழன் ஆறு, திருவிடைமருதூர்வீரசோழன் ஆறு, ஆடுதுறைவீரசோழன் ஆறு, பட்டுக்கோட்டை வட்டாரம், பேராவூரணி மற்றும கடலோரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடலிலும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட இடங்களில் போலீசாரின் முன் அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


0 comment(s) to... “தஞ்சை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள்: கலெக்டர் சுப்பையன் அறிவிப்பு”