முத்துப்பேட்டை அருகே தூக்கு போட்டு டிரைவர் தற்கொலை
Posted September 04, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காட்டை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் அய்யப்பன்(22). இவர் மினி ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று நள்ளிரவு இவர் நம்மங்குறிச்சியில் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இவர் ஓட்டி வந்த மினி ஆட்டோ மரத்தில் மோதியபடி நின்றது. இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து முத்துப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அய்யப்பன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அய்யப்பன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே தூக்கு போட்டு டிரைவர் தற்கொலை”