முத்துப்பேட்டை அருகே த.மா.கா. பிரமுகரை கொலை செய்ய முயற்சி: போலீஸ் தேடிய 2 பேர் கைது
Posted September 18, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
த.மா.கா. பிரமுகர்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் அறமங்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம்(வயது 52). இவர் த.மா.கா. மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு பாலசுந்தரம் தனது வீட்டு வாசல் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர். இதில் காயமடைந்த பாலசுந்தரம் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு நேற்றுமுன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று, வீட்டில் தங்கியிருந்த தில்லைவிளாகத்தை சேர்ந்த வினோத் (21), ஜாம்புவானோடையை சேர்ந்த சங்கர் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருத்துறைப்பூண்டி சப்-மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை தேடிவருகின்றனர்.
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே த.மா.கா. பிரமுகரை கொலை செய்ய முயற்சி: போலீஸ் தேடிய 2 பேர் கைது”