அதிராம்பட்டினம் அருகே உள்ள தம் பிக் கோட்டை கீழக் காடு பகு தி யைச் சேர்ந் த வர் ராஜ் மோ கன். இவ ரது சினை ஆடு ஒன்று கடந்த சனிக் கி ழமை அரு கி லுள்ள தோப் பிற்கு மேய்ச் ச லுக்கு சென்று குட்டி போட முடி யா மல் அங் கேயே படுத் து விட்டது. ஆடு திரும்பி வரா த தால் ராஜ் மோ கன் தேடி சென் றார். தோப் பில் குட்டி போட ஆடு போரா டி யது. உட ன டி யாக கால் நடை மருத் து வரை அழைத்து வந் தார். அவர் பல மணி நேரம் போரா டி யும் குட்டியை எடுக்க முடி ய வில்லை. ஆட்டின் இடுப்பு பகு தி யில் குறை பாடு உள் ள தா க வும் அறுவை சிகிச்சை செய் தால் மட்டுமே ஆடு பிழைப் ப தற்கு வாய்ப் புள் ளது என வும் கால் நடை மருத் து வர் தெரி வித் தார். இதை ய டுத்து நேற்று காலை 9 மணிக்கு முத் துப் பேட்டை கால் நடை மருத் து வ ம னைக்கு செல் லப்பா ஆட்டைக் கொண்டு சென் றார். அங்கு டாக் டர் கங்கா சூடன் ஆட்டுக்கு மயக்க ஊசி போடப் பட்டு அறுவை சிகிச்சை செய்து வயிற் றி லேயே இறந்த நிலை யில் ஒரு ஆட்டுக் குட்டியை எடுத் தார். அறு வை சி கிச்சை சுமார் 45 நிமி டங் களில் செய்து முடிக் கப் பட்டது. சரி யான நேரத் தில் அறுவை சிகிச்சை மூலம், இறந்த குட்டியை எடுத் த தால் ஆட்டின் உயிர் காப் பாற் றப் பட்டது. அறு வை சி கிச்சை முடிந்த 15 நிமி டங் களி லேயே ஆடு எழுந்து நடந் தது. அங் கி ருந்த அனை வ ரை யும் மிகுந்த வியப் பில் ஆழ்த் தி யது.
கால் நடை மருத் து வர் கங் கா சூ டன் கூறு கை யில், சிசே ரி யன் அறுவை சிகிச்சை செய் யப் பட்ட ஆட்டிற்கு 'நேரோ பெல் விஸ்' எனும் குறை பாடு இருந் தது. இந்த குறை பாடு உள்ள ஆட்டின் இடுப்பு எலும் பு கள் குறு கி ய வாறு இருக் கும், இவ் வகை ஆடு கள் இயற் கை யான முறை யில் குட்டியை ஈன இய லாது. இந்த ஆடு 3 மாத குட்டி யாக இருந் த போது இரு சக் கர வாக னத் தில் மோதி முதுகு பகு தி யில் அடி பட்டதே இக் கு றை பாடு வர கார ணம். இந்த ஆட்டிற்கு முத லில் ' ஃபீட்டாட்டமி ' எனும் முறை யில் இறந் து போன ஆட்டுக் குட்டியை எடுக்க முயற் சி செய் யப் பட்டது, ஆட்டுக் குட்டி யின் தலை இடுப் பெ லும் பைத் தாண்டி வர மு டி யா த தால் சிசே ரி யன் அறுவை சிகிச்சை செய்து ஆட்டுக் குட்டி எடுக் கப் பட்டது என் றார்.