ஆஸ்திரேலிய நாட்டில் ஆங்கில வார்த்தை போட்டியில் தமிழக குழந்தைகள் சாதனை இறுதி போட்டிக்கு தேர்வு

Posted September 03, 2015 by Adiraivanavil in Labels:
சிட்னி,
ஆஸ்திரேலிய நாட்டில் ‘சேனல் 10’ என்ற தொலைக்காட்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், ஸ்பெல்லிங் பீ என்னும் ஆங்கில வார்த்தை போட்டியை நடத்துகிறது. நீண்ட, கடினமான வார்த்தைகளின் எழுத்துக்களை சரியாக எழுத்து கூட்டி சொல்கிற இந்த போட்டியில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
தமிழக இரட்டையர்
3 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், இறுதிப்போட்டிக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர், தமிழ்நாட்டை சேர்ந்த இரட்டையர். அவர்கள், ஹர்பித், ஹர்பிதா ஆவார்கள். 9 வயதான இவர்கள் ஆஸ்திரேலியாவில் 3–ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்களது பெற்றோர் பாண்டியன் அண்ணாமலை, லட்சுமி பிரியா ஆகியோர் வேலூர் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள் ஆவார்கள்.
2007–ம் ஆண்டு, இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்று குடியேறினார்கள்.
அப்பா, அம்மா சொன்ன கதைகள்
ஸ்பெல்லிங் பீ போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது குறித்து ஹர்பிதா கூறும்போது, ‘‘இரவில் நாங்கள் தூங்கப்போகும்போது, எங்கள் அம்மா, அப்பா சொன்ன கதைகள், எங்களுக்கு வார்த்தைகளிலும், எழுத்துக்களிலும் ஒரு விருப்பத்தை ஏற்படுத்தின. வார்த்தைகள் உருவானவிதம் எப்படி, அவற்றை எப்படி உச்சரிப்பது, அவற்றை எப்படி வகைப்படுத்துவது என கவனத்தை செலுத்தினோம்’’ என கூறினார்.
இந்தக் குட்டிப்பெண்ணுக்கு பிடித்தமான வார்த்தை ‘Cafune என்பதாகும். இந்த வார்த்தை, அன்புக்குரிய ஒருவரின் தலை முடியை கோதி விரல்களை எண்ணுவதாகும்.
ஹர்பித்துக்கு பிடித்தமான வார்த்தை
இவரது சகோதரனான ஹர்பித்துக்கு பிடித்தமான நீளமான வார்த்தை, 29 ஆங்கில எழுத்துக்களை கொண்ட ‘Floccinaucinihilipilification என்பதாகும்.
இந்த வார்த்தைக்கு அர்த்தம், மதிப்பற்றது என்று ஒன்றை மதிப்பிடும் செயல் அல்லது பழக்கம் என்பதாகும்.


0 comment(s) to... “ஆஸ்திரேலிய நாட்டில் ஆங்கில வார்த்தை போட்டியில் தமிழக குழந்தைகள் சாதனை இறுதி போட்டிக்கு தேர்வு”