நோக்கியாவின் 3310 செங்கல் போனை நினைவிருக்கிறதா?

Posted September 04, 2015 by Adiraivanavil in Labels:
நியூயார்க், செப். 4- 

செங்கல் எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த நோக்கியா 3310 மொபைல் போனின் 15-வது பிறந்தநாளை இணையதளமே கடந்த செப்டம்பர் 2-ம் தேதி களிப்புடன் கொண்டாடியது. உலகம் முழுவதும் சுமார் 12 கோடியே 60 லட்சம் போன்களை கடந்த 2011-ம் ஆண்டு வரை விற்றுத்தீர்த்திருந்தது நோக்கியா. 

ஆப்பிள் ஐபோன் 6S-க்காக தற்போது ஆவலோடு காத்திருக்கும் பலரும் இந்த நோக்கியாவின் புகழ் பாடாமல் இல்லை. நோக்கியா 3310 போனை பலரும், உடையாத போன், நீண்ட நேர பேட்டரியுடன் நீடித்து உழைக்கும் போன் என நினைவு கூர்ந்தாலும், அதில் 459 எழுத்துக்களுடன், மெசேஜ் செய்ய முடியும், அதிலிருந்த ‘ஸ்நேக் II' விளையாட்டு அனைவரையும் கிட்டத்தட்ட அடிமையாக்கி வைத்திருந்த இந்தச் சிறப்பம்சங்களும் இருந்தது. 

இன்னும் எவ்வளவு வேகமாக மொபைல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தாலும், நோக்கியா 3310-ஐ பயன்படுத்தத் தொடங்கியவர்களின் மனதில் என்றென்றும் அது நிலைத்திருக்கும். அல்லவா? 

உங்களது ஆரம்பகால போன் என்ன?


0 comment(s) to... “நோக்கியாவின் 3310 செங்கல் போனை நினைவிருக்கிறதா?”