அதிரை அரசு மருத்துவனையில் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டக திட்டம்

Posted September 14, 2015 by Adiraivanavil in Labels:
 அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்குஅம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம்வழங்கும் திட்டம் உள்ளிட்ட மருத்துவத்துறையில் 4 புதிய திட்டங்களை முதல்அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 25–ந்தேதி சட்டசபையில் அறிவித்தார்.

இதனையடுத்து அதிராம்பட்டினம் அரசு மருத்துவனையில் இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை தலைமை வகித்தார். அரசு மருத்தவமனை மருத்துவர்கள் சீனிவாசன், ஹாஜா முகைதீன், சுதாகர், மருந்தகர் செல்வராஜ், செவிலியர் ஆர். ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்ட தாய்மார்களுக்கு முதல்அமைச்சரின்அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம்வழங்கப்பட்டன. இதனை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் முதல்அமைச்சருக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் அதிரை கூட்டுறவு வங்கி துணை தலைவர் முஹம்மது தமீம், அதிரை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உதயகுமார், சிவக்குமார், அபூதாகிர், ஹாஜா முகைதீன், அதிமுக வார்டு செயலாளர்கள் செல்வம், ஆர்.பி.எஸ் சகாபுதீன், ஷபியுல்லாஹ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












0 comment(s) to... “அதிரை அரசு மருத்துவனையில் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டக திட்டம்”