பதற வைத்த பத்துமாத குழந்தையின் உடல்: நெஞ்சை பிழிந்த சோகம்!

Posted September 04, 2015 by Adiraivanavil in Labels:
கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் பரிசல் விபத்தில் ஐந்து நாட்களுக்கு பிறகு கிடைத்திருக்கிற பத்து மாத குழந்தை சுபிக்ஷாவின் உடல் பார்ப்பவர் அனைவரையும் பதறச் செய்திருக்கிறது.

கடந்த 30ஆம் தேதி, திருமண நாள் கொண்டாடுவதற்காக சென்னை தியாகராய நகரிலிருந்து ஒகேனக்கல் வந்த ராஜேஷ்  - கோமதி தம்பதி மற்றும் அவர்களுடைய  குழந்தைகள் சச்சின், தர்ஷன், மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் கெளரி, மைத்துனர் ரஞ்சித் அவரது மனைவி கோகிலா, அவரது பத்து மாத குழந்தை சுபிக்ஷா ஆகியோர் பரிசலில் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பரிசல் கவிழ்ந்ததில்,  பரிசல் ஓட்டி காஜா முருகேசன் உட்பட பத்துபேரும் தண்ணீருக்குள் மூழ்கினர். இதில் ராஜேஷ்,  அவர் மனைவி கோமதி மற்றும் மகன் சச்சின், பரிசல் ஓட்டி காஜா முருகேசன் தவிர மற்ற ஆறு பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

காவல்துறையும், மீட்பு நிலையத்தைச் சேர்ந்தவர்களும் உடனடியாக தேடுதல் பணியை முடுக்கிவிட்டு 30ஆம் தேதி இரண்டு உடல்கள், 31ஆம் தேதி 3 உடல்கள் என ஐந்து உடல்களை மீட்டு விட்டனர். ஆனால், பத்து மாத குழந்தையான சுபிக்ஷாவின் உடலை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த ஐந்து நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட பரிசல்கள், தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று மாலை சுமார் 4.45 மணியளவில் விபத்து நடந்த இடத்திலிருந்து சற்றுத்தொலைவில் உள்ள கங்கல்குழி என்ற இடத்தில் சுபிக்ஷாவின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது.

மீன்கள் தின்ற கண்கள், உப்பிய உடல் என அந்த பிஞ்சுக்குழந்தையின் உடலை பார்ப்பர்கள் பதறித் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

.vikatan நியூஸ் 


0 comment(s) to... “பதற வைத்த பத்துமாத குழந்தையின் உடல்: நெஞ்சை பிழிந்த சோகம்!”