பைக் மோதி சைக்கிளில் சென்றவர் படுகாயம்.

Posted September 07, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவில் மண்ணங்கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(58) என்பவர் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே திருத்துறைப்பூண்டியிலிருந்து வந்துக் கொண்டிருந்த வீரசேகரன் என்பவர் ஓடி வந்த பைக் கோவிந்த ராஜ் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி விசப்பட்டு படுகாயம் அடைந்த கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் ராமானுஜம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.


0 comment(s) to... “பைக் மோதி சைக்கிளில் சென்றவர் படுகாயம்.”