பட்டுக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவராக மணிகண்டன் நியமனம்: இளங்கோவன் அறிவிப்பு
Posted September 11, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:–
தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவராக ரெனா.மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சி தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரெனா. மணிகண்டன் கட்சித்தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு கட்சி தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவராக மணிகண்டன் நியமனம்: இளங்கோவன் அறிவிப்பு”