முத்துப்பேட்டை விநாயகர் சிலை ஊர்வலப் பாதை மாற்றக் கோரி முதல்வருக்கு புகார் அனுப்பும் படிவம் தவ்ஹீத் ஜமாத்தினர் ஜும்ஆ தொழுகையில் வழங்கல்.

Posted September 12, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டையில் வருகிற 22-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இதனையடுத்து போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தவ்ஹீத் ஜாமத் உட்பட பல்வேறு அமைப்பினர் சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவுப்படி ஊர்வல பாதையை மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையை முன்னிட்டு நூர் பள்ளிவாசலுக்கு வந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களிடம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் அதன் தலைவர் முகம்மது அலி ஜின்னா, செயலாளர் புகாரி, பொருளாளர் சுகைப் கான், துணைத் தலைவர் யூசுப், துணைச் செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்ப முத்துப்பேட்டை விநாயகர் சிலை ஊர்வல பாதையை மாற்றக்கோரிய வாசகம் எழுதப்பட்ட படிவங்களை வழங்கினர்.
படம் செய்தி:
நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை


முத்துப்பேட்டை நூர் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களிடம் தவ்ஹீத் ஜாமத்தினர் விநாயகர் சிலை ஊர்வல பாதையை மாற்றக்கோரிய வாசகம் எழுதப்பட்ட படிவங்களை வழங்கினர்.


0 comment(s) to... “முத்துப்பேட்டை விநாயகர் சிலை ஊர்வலப் பாதை மாற்றக் கோரி முதல்வருக்கு புகார் அனுப்பும் படிவம் தவ்ஹீத் ஜமாத்தினர் ஜும்ஆ தொழுகையில் வழங்கல்.”