முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை 1 பொதுக்குழு கூட்டம் நூர் பள்ளியில் மாவட்ட தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாலிக், மாவட்ட துணை தலைவர் மிஸ்கின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்பொழுது முக்கிய தீர்மாணங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் முத்துப்பேட்டையில் ஒவ்வொரு வருடமும் நடந்து வரும் விநாயகர் ஊர்வலத்திலும் ஊர்வலக்காரர்களால் கலவரங்கள் தொடர்ந்துக் கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதி மன்ற உத்தரவுபடி பாதை மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அந்த உத்தரவில் உள்ள பின் பற்ற வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. எனவே அதனை அமல் படுத்தும் வகையில் தொடர்ச்சியாக ஊர்வலத்தில் நடந்து வரும் கலவரங்களை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஊர்வலத்தின் பாதையை மாற்றம் செய்து அருகில் உள்ள கந்தப்பரிச்சான் ஆறு அல்லது கோரையாற்றில் கரைக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசையும், மாவட்ட அட்சியரையும,; மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மேலும் வருகிற ஜனவரி 2016 31-ம் தேதி திருச்சியில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு முத்துப்பேட்டை முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது இவ்வாறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள், வாக்கொடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் தவ்ஹீத் ஜமாத் கிளை 1 தலைவராக முகம்மது அலி ஜின்னா, செயலாளராக புகாரி, பொருளாளராக சுகைப் கான், துணைத் தலைவராக யூசுப், துணைச் செயலாளராக சாகுல் ஹமீது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதே போன்று மருத்துவ அணி தலைவராக முகம்மது தவ்பீக், மாணவர் அணி தலைவராக சல்மான் கான், செய்தி தொடர்பாளராக சஜாத் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தவ்ஹீத் ஜமாத் பொருப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை