அதிரையில் திமுகவினர் கொண்டாடிய அண்ணா பிறந்த நாள் விழா(படங்கள் இணைப்பு)
Posted September 15, 2015 by Adiraivanavil in Labels: DMK
அண்ணாவின் 107 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை திமுக அதிரை பேரூர் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து பேருந்து நிலைய பகுதிகளில் பேரணியாக சென்று திமுக கொடிக்கம்பங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை மேற்கு தொகுதி ஒன்றிய செயலளார் ஏனாதி பா. இராமநாதன், அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன், அவைத்தலைவர் அப்துல் காதர், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், முல்லை மதி, பேரூர் இணைச்செயலாளர் அன்சர்கான், மகிழங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சிவாஜி, மீனவரணி பொறுப்பாளர் கோடி நாகராஜ், அதிரை பேரூர் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அதிரை பேரூர் வார்டு பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், முத்துராமன், நிஜாம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.
0 comment(s) to... “அதிரையில் திமுகவினர் கொண்டாடிய அண்ணா பிறந்த நாள் விழா(படங்கள் இணைப்பு)”