முத்துப்பேட்டையில் எஸ்.பி. தலைமையில் போலீஸ் அணிவகுப்பு. திருவாரூர் கலெக்டர் பார்வையிட்டார்.

Posted September 20, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டையில் வருகிற 22-ம் தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல் துறை சார்பில் பல்வேறு முன் ஏற்பாடுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன் முத்துப்பேட்டையில் முகாமிட்டு பல்வேறு பனிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக ஆசாத் நகர் கோரையாற்று பாலத்திலிருந்து துவங்கிய போலீஸ் அணிவகுப்பிற்கு எஸ்.பி.ஜெயசந்திரன் தலைமை வகித்து போலீசார் அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பு ஊர்வலம் திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றது. அங்கு திருவாரூர் கலெக்டர் மதிவாணன் போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் அங்கு எஸ்.பி.ஜெயசந்திரனிடம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது டி.ஆர்.ஓ. மோகன்ராஜ், மன்னார்குடி ஆர்.டி.ஓ. செல்வசுரப்பி, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் பழனிவேல், முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண் ஆகியோர் உடனிருந்தனர். அங்கிருந்து புறப்பட்ட போலீஸ் அணிவகுப்பு நியூ பஜார், கொய்யா முக்கம், பெரிய கடைத் தெரு, மரைக்காயர் தெரு, எஸ்.கே.எம் தெரு வழியாக பேட்டை சாலையில் சென்றது. பின்னர் அங்கிருந்து முகைதீன் பள்ளிவாசல், பட்டுக்கோட்டை சாலை, பங்களா வாசல் வழியாக முத்துப்பேட்டை காவல் நிலையம் சென்றடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான போலீசார் கலந்துக் கொண்டனர்.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் எஸ்.பி. தலைமையில் போலீஸ் அணிவகுப்பு. திருவாரூர் கலெக்டர் பார்வையிட்டார்.”