அதிரையில் நள்ளிரவில் திடீர் மழை

Posted September 03, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு நகரின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து குளுமையைக் கொண்டு வந்தது.  . இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் கடும் வெயில் அடித்து வந்தது மறுபடியும் வெயில் வெளுக்க ஆரம்பித்துவிட்டதோ என்று மக்கள் குழப்பமடைந்தனர். இந்த நிலையில்,நேற்று மாலைக்கு மேல் வானிலை மாறியது. காற்று வீசத் தொடங்கியது. ஆனால் மழை எதுவும் வரவில்லை. இந்த நிலையில், நள்ளிரவில்  மழை வெளுத்துக் கட்டியது. திடீரென பெய்த இந்த மழையால் அதிரை பகுதியில்  ஏ.சி. போட்டது போல குளுமையானது.




0 comment(s) to... “அதிரையில் நள்ளிரவில் திடீர் மழை”