அனைத்து கட்சி பிரதிநிதிகள் ரயல்வே பிரச்சனை குறித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையை சந்தித்து புகார் மனு.

Posted September 13, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் பழமை வாய்ந்ததாகும். வெள்ளைக்கார ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த ரயில்வே நிலையம் மூலம் இப்பகுதியில் உள்ள தர்கா மற்றும் வழிப்பாட்டு தளங்கள் சுற்றுலா தளங்களால் ஒரு காலத்தில் ரயில்வே துறைக்கு அதிக லாபத்தை பெற்று தந்த ஒரு பகுதியாகும். இந்த நிலையில் 4 வருடங்களுக்கு முன்பு அகல ரயில் பாதை பணிக்காக இப்பகுதிக்கு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. பணிகள் தற்பொழுது துவங்கி நடைபெற்று வரும் நிலையில் அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில்; பி கிரேடாக இருந்த முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தரம் குறைத்து சி கிரேடாக மாற்ற தென்னக ரயில்வே துறை முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் இப்பகுதிக்கு வரும் ரயில்கள் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் வகையிலும், மேலும் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத ஒரு ரயில்வே நிலையமாக மட்டுமே செயல்படும். இதனால் இப்பகுதி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தொலை தூர பயணம் மேற்கொள்ள பல்வேறு இடற்பாடுகள் மற்றும் வசதிகள் பெற வாய்புகள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இப்பகுதி மக்கள் விரைவில் போராட்டம் நடத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கரூரில் உள்ள அவரது இல்லத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையிடம் முத்துப்பேட்டை தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் வர்த்தகக்கழக தலைவர் ராஜாராம், கௌரவ தலைவர் திருஞானம், இ.கம்யூனிஸ்ட் ஒன்றிய துணைச் செயலாளர் ராமநாதன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெகபர்அலி, நுகர்வோர் அமைப்பின் செயலாளர் சுல்தான் இபுராஹிம், தர்கா டிரஸ்டிகள் தமிம் அன்சாரி சாஹீப், நூர்முகமது இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் வக்கீல் தீன் முகம்மது, மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் முகம்மது பைசல், ஒன்றிய செயலாளர் நெய்னா நகரச் செயலாளர் ஹமீம், த.மு.மு.க நகர துணைச் செயலாளர் சீமான் மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து கட்சி, அனைத்து அமைப்பு பிரதிநிதிகள் தனித்தனியாக முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் தரம் குறைப்பதை கைவிடக் கோரியும் தரம் உயர்த்தியும், கூடுதலான ரயில் போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்தி தர ரயில்வே அமைச்சரிடம் வழியுறுத்தும் படி மனு வழங்கினர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட தம்பித்துரை கோரிக்கை குறித்து நிச்சியம் ரயில்வே அமைச்சரை சந்தித்து கோரிக்கை பெற்று தருவேன் என்று உறுதிக் கூறி பேசினார்.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை


முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து கட்சி, அனைத்து அமைப்பு பிரதிநிதிகள் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் கரூரில் உள்ள அவரது இல்லத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையிடம் மனுக் கொடுத்தனர்.


0 comment(s) to... “அனைத்து கட்சி பிரதிநிதிகள் ரயல்வே பிரச்சனை குறித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையை சந்தித்து புகார் மனு.”