வார்டுகளில் தி.மு.க பொது உறுப்பினர் கூட்டம்.

Posted September 13, 2015 by Adiraivanavil in
 முத்துப்பேட்டை தி.மு.க பேரூராட்சி 1,17,18 ஆகிய வார்டுகளுக்கான பொது உறுப்பினர்கள் கூட்டம் நகர அவைத்தலைவர் ராமஜெயம் தலைமையில் தெற்குகாடு மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளரும், நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக்; பேசினார். இதில்; வாக்காளர் சேர்த்தல், நீக்கல், செப்டம்பர் 20-ல் தலைவர் கலைஞர் திருவாரூர் பொதுக் கூட்டம், தளபதியின் நமக்கு நாமே பயணத்திட்டம் மற்றும் கழக ஆக்க பணிகள் குறித்து பேசப்பட்டது. கூட்டத்தில் வார்டு செயலாளர்கள் செல்வம் சிவசுப்பிரமணியன், அன்பன் மற்றும் ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி தமீம், நகர இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகரன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். அதே போன்று 4,5 ஆகிய வார்டுகளுக்காக புது காளியம்மன் கேரிவிலிலும், 2,3 ஆகிய வார்டுக்களுக்காக புதிய பேருந்து நிலையத்திலிலும் நடைபெற்றது. இதில் வார்டு செயலாளர்கள் ராபட், பாலசுப்பிரமணியன், ராஜாராம், அமானுல்லா, பேரூராட்சி கவுன்சிலர் சிவ.அய்யப்பன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். 

படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை



முத்துப்பேட்டை தி.மு.க பேரூராட்சி 1,17,18 ஆகிய வார்டுகளுக்கான பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளரும், நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக்; பேசினார். அருகில் ஒன்றிய செயலாளர் மனோகரன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, அவைத் தலைவர் ராமானுஜம் ஆகியோர் உள்ளனர்.


0 comment(s) to... “வார்டுகளில் தி.மு.க பொது உறுப்பினர் கூட்டம். ”