மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசின் சுகாதார திட்ட பணிகளை சிறப்பாக நிறைவேற்றிய மருத்துவ அலுவலருக்கு பாராட்டு

Posted September 15, 2015 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டத்தில் தமிழக அரசின் சுகாதார திட்டப் பணிகளை சிறப்பான வகையில் நிறைவேற்றிய மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் டாக்டர் எம்.எட்வின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
        நிகழ்ச்சிக்கு  தமிழக அரசு சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தமிழக அரசின் சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் (..),  சுகாதார திட்ட இயக்குநர் சாம்பு கல்லோலிகர் (..), மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் (..), சுகாதார திட்ட முன்னாள் இயக்குநர் சண்முகம் (..), மருத்துவ பணிகள் இயக்குநர் டாக்டர் சந்திரநாதன், சுகாதார திட்ட மாநில ஆலோசகர் டாக்டர் காமாட்சி மற்றும் பல்வேறு மாவட்ட சுகாதார துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
     விழாவில் கௌரவிக்கப் பட்ட மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் டாக்டர் எம்.எட்வினை ரெட்கிராஸ் அலுவலர்கள், மாவட்ட சுகாதார திட்ட அலுவலர்கள் பாராட்டினர்.




0 comment(s) to... “மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசின் சுகாதார திட்ட பணிகளை சிறப்பாக நிறைவேற்றிய மருத்துவ அலுவலருக்கு பாராட்டு ”