மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கவும், மக்களுக்கு தொல்லை ஏற்படுவதை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், பொது அமைதி, கலவர தடுப்பு ஆகிய
நோக்கங்களுக்காகவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. குறிப்
பி ட்ட நபருக்கு எதிராகவும், குறிப்பிட்ட பகுதி, நகரம் ஆகிய இடங்களுக்கும் 144 தடை உத்தரவு பிறப்பி க்கலாம். இந்த தடையை மாவட்ட ஆட்சியர், தமது ஆளுகைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் 144 தடை உத்தரவை பிறப்பிக்க முடியும். மேலும் இத் தடையை குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும், குறிப் பிட்ட பகுதியிலும் 144 தடை உத்தரவைப் பிறப்பி
க்கலாம்.
இத்தடை காலத்தில், தமிழகத்தில் யாரும் பொது இடங்களில் 5 பேராக கூடி செல்ல முடியாது. உரி மம் பெற்றுள்ள துப்பாக்கிகளை போலீசிடம் ஒப்படைக்கவேண்டும். இத்தடை அமலில் இருக் கும்போது மீறினால், இந்திய தண்டனை சட்டத்தி ன் 188–ம் பிரிவின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படும். தடையைமீறிய குற்றத்திற்காகவும் மக்களுக்கு தொந்த
வு ஏற்படுத்தியதற்காகவும் மீறியவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.200 அப ராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தடை உத்தரவை யாராவது மீறி, மனித உயிரு க்கு சேதம், சுகாதார கேடு, கலவரம் ஏற்பட்டு பொது அமைதி குலைந்துபோக காரணமான நபர்களுக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சில சமயத்தில் கலவரத்தில் ஈடுப டுபடுவோர், துப்பாக்கி சூட்டிற்கு ஆளாகி உயிரை இழக்கவும் நேரிடலாம்.
0 comment(s) to... “144 தடை உத்தரவு? – ஓர் அலசல்”