அதிரை மக்களுக்கு ஓர் அறிவிப்பு! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்க வேண்டுமா?
Posted October 25, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் அங்கே அங்கே உள்ள பகுதிகளில் நாளை பள்ளிகூடம் விடுமுறை என்பதால் வாக்கு சாவடிகள் நடைபெறவுள்ளது இதனையடுத்து வாக்காளர்களின் பெயர்களை வாக்கு பட்டியலில் சேர்க்கவும் நீக்கவும் மற்றும் திருத்தம் செய்யவும் அந்தஅந்த வாக்கு சாவடிகளில் உள்ள அலுவலரிடம் உரிய படிவத்தைப் பெற்று நிறைவு
செய்து பதிவு செய்யலாம் இந்த வாய்ப்பை அதிரை பெதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்;.
குறிப்பு- இதே போல வரும் நவம்பர் 2-ம்தேதி அன்று அங்கே அங்கே உள்ள வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படும்
தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–
வருகிற 1.1.2015–ம் தேதியை தகுதிநாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட, நீக்கிட, திருத்தம் செய்திட அந்தந்த பகுதிகளில் உள்ள வரையறுக்கப்பட்ட மையத்தில் வாக்காளர் சேர்ப்பு பணி நடக்கிறது.
எனவே வருகிற 10.11.2014 வரை வரையறுக்கப்பட்ட அலுவலரிடம் உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து நாளை (26–ந்தேதி) மற்றும் 2.11.2014 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் நடைபெறும் சிறப்பு முகாம் வாய்ப்பினை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comment(s) to... “அதிரை மக்களுக்கு ஓர் அறிவிப்பு! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்க வேண்டுமா? ”