கடற்கரை தெரு மலிவுவிலை அங்காடியில் மேற்கூறையின்றி மழையில் மக்கள் அவதி....
Posted October 19, 2014 by Adiraivanavil in Labels: adirai vanavil
கடற்கரைத்தெரு மலிவுவிலை அங்காடியில் இன்று மலிவு விலை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று அப்பகுதி மக்கள் மலிவுவிலை பொருட்கள் வாங்கச் சென்றனர் அப்போது மழை பெய்து கொண்ழருந்ததால் மழையில் பெரும் அவதிக்கு உள்ளானார்கள் மேல்கூரையில்லாமல் உயரமான படிகளில் ஏற இறங்க முடியாமல் வயோதிகர்கள் பெண்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள் அருகில் முட்புதர்களும் மண்டிக்கிடப்பதால்
பெண்கள் ரோட்டில் நிற்கும் நிலை ஏற்ப்படுகிறது. இதற்கு சம்மந்ப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.செய்தி மற்றும் படங்கள்: சலீம் மாலிக்
0 comment(s) to... “கடற்கரை தெரு மலிவுவிலை அங்காடியில் மேற்கூறையின்றி மழையில் மக்கள் அவதி....”