அதிரையில் குர்பானிக்காக செம்மறிஆடுகள் விற்பனை
Posted October 04, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
அதிரையில் இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை எதிர்வரும் [ 06-10-2014 ] அன்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு குர்பானி வழங்குவார்கள். இதற்காக ஆடு, மாடு, ஒட்டகங்கள் அதிரைக்கு வர துவங்கியுள்ளது. குறிப்பாக அதிரை சுற்று வட்டார கிராமப்பகுதியின் விவசாயிகளிடமிருந்து
வாங்கி வரப்பட்ட செம்மறி இன ஆடுகள் அதிகமாக வர துவங்கியுள்ளது.பெருநாள் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதிரையில் உள்ள இறைச்சி கடைகளின் வியாபாரிகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். முழு ஆடுகளாகவும், எடை வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆடுகளும் சராசரியாக 20 முதல் 30 கிலோ வரை எடையளவு கொண்டுள்ளது. முழு ஆடு சராசரியாக 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையும், முழு ஆட்டை எடை வைத்து கிலோ ரூ 220/- க்கு விற்பனை செய்யபடுகிறது.0 comment(s) to... “ அதிரையில் குர்பானிக்காக செம்மறிஆடுகள் விற்பனை”