மதுக்கூரில் முறை வைக்காமல் தண்ணீர் விடக்கோரி அனைத்து கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

Posted October 15, 2014 by Adiraivanavil in Labels:

 : முறை வைக்காமல் பாசனத்துக்கு தண்ணீர் விடக்கோரி மதுக்கூரில் அனைத்து கட்சிகள் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. 
மதுக்கூர் ஒன்றியத்தில் கடைமடை பாசனத்துக்கு முறை வைக்காமல் தொடர்ந்து தண்ணீர் விடக்கோரி பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூரில் அனைத்து கட்சிகள், விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் காதில் பூ சுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இதில் மேட்டூர் அணை திறந்து பல மாதங்களாகியும் கல்லணை கால்வாயின் கல்யாணஓடை வாய்க்கால், கிருஷ்ணாபுரம் தொடர் வாய்க்காலில் தொண்டராம்பட்டு முதல் கல்யாண ஓடை, கிருஷ்ணாபுரம் சிரமேல்குடி வரை. வடவாறு விஸ்தரிப்பு வாய்க்காலில் கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை முதல் எளவனூர், மகாராஜபுரம் வரையிலும் கடைமடை பகுதியாகும். இப்பகுதியில் விவசாயிகள் ஒருபோகம் சம்பா சாகுபடிக்கு நாற்று பாவ முடியாமலும், நாற்று பாவியவர்கள் நடவு செய்ய முடியாமலும்  பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும். இரண்டாம் கட்ட மராமத்து பணியை விரைவில் முடிக்க வேண்டும். கிளை வாய்க்கால்களில் உடைந்து சேதமான பைப், மதகுகளை உடனே சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. 
விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வேதாச்சலம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேலு, விவசாயிகள் சங்க தலைவர் சந்திரன், மதுக்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோ, கண்ணையன், மதுக்கூர் ஒன்றிய மதிமுக செயலாளர் காரி முத்து, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வீரையன், மதுக்கூர் ஒன்றிய சிபிஐ செயலாளர் நாதன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ராசிக் அகமது மற்றும் பலர் பங்கேற்றனர்.நன்றி தினகரன் 



0 comment(s) to... “மதுக்கூரில் முறை வைக்காமல் தண்ணீர் விடக்கோரி அனைத்து கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்”