பட்டுக்கோட்டையில் வாலிபர் வெட்டிக்கொலை
Posted October 26, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை தாலுகா ஒதியடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேதரத்தினம். அவருடைய மகன்கள் பெரியதுரை (வயது 32), சின்னதுரை 30). இருவரும் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தனர். நேற்று முன் தினம் இரவு 7.30 மணிக்கும் பெரியதுரையும், சின்னதுரையும் பட்டுக்கோட்டை வந்து கோழிகளுக்கு தீவனங்கள் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சின்னதுரை மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். பட்டுக்கோட்டை–dவளவன்புரம் டாஸ்மாக்கடை அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து சுற்றி வளைத்து சின்னத்துரையை அரிவாளால் சரமாரியாக வெட்டியும், உருட்டுக்கட்டைகளால் தாக்கிவிட்டும் ஓடிவிட்டனர். ஆபத்தான நிலையிலிருந்த சின்னதுரையை தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி சின்னதுரையின் அண்ணன் பெரியதுரை பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பட்டுக்கோட்டையைச் சேர்ந்த குமார், அருண், ராஜா, பிரபு, சுந்தர், கட்டப்பழனி, அவசரமணி, நாடிமணி ஆகிய 8 பேர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.நன்றி தினத்தந்தி
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் வாலிபர் வெட்டிக்கொலை”