பட்டுக்கோட்டை டாக்டருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை கோர்ட்டு உத்தரவு

Posted October 18, 2014 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை வ.உ.சி.நகரில் வசிப்பவர் ஸ்டெல்லா ஜோஸ்பின் மேரி (வயது60) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தற்போது வசிக்கும் வீட்டை 2007–ம் ஆண்டு பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சண்முகநாதன் என்பவரிடம் ரூ.4.78 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே அந்த வீட்டின் பேரில் எல்.ஜ.சி. நிறுவனத்தில் ரூ.1.30 லட்சம் கடன் நிலுவையில் இருந்துள்ளது. ஆனால் சண்முகநாதன் அதை கூறாமல் ஸ்டெல்லா ஜோஸ்பின் மேரியிடம் வீட்டை விற்றுள்ளார். எல்.ஐ.சி. நிறுவனம் வீட்டை ஜப்தி செய்ய வந்த போது தான் ஆசிரியைக்கு
மேற்கண்ட விவரம் தெரியவந்தது. இதையடுத்து சண்முகநாதன் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர்நீதி மன்றத்தில் ஸ்டெல்லா ஜோஸ்பின் மேரி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மோகனா, சண்முகநாதனுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.நன்றி தின தந்தி 


0 comment(s) to... “ பட்டுக்கோட்டை டாக்டருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை கோர்ட்டு உத்தரவு”