அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக கண்களை பாதிக்கூடிய 'மெட்ராஸ் ஐ' என்று சொல்லப்படும் ஒரு விதமான வைரஸ் நோய் வேகமாக பரவிவருகிறது. இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் இது ஒரு விதமான வைரஸ் கிரிமயினால் ஏற்படக்கூடிய தொற்றுநோய், பொதுவாக மழைகாலங்களில் இந்த பாதிப்பு ஏற்படும,; இந்த நோய் பரவாமல் இருக்க கண்களை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும,; மேலும் 'மெட்ராஸ் ஐ' ஆல் பாதிக்கபட்டவர்கள் உபயோகபடுத்தும் கைகுட்டைகள்,பெட்சீட்கள்
மற்றும் தலையணைகள் ஆகியவற்றை உபயோகபடுத்தக்கூடாது இதை பின்பற்றினால் 'மெட்ராஸ் ஐ' நோயிலிருந்து ; நம்மை பாதுகாத்து கொள்ளளாம் என தெரிவித்தர்
அதிராம்பட்டினத்தில் "மெட்ராஸ் ஐ' கண் நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதோடு இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
0 comment(s) to... “அதிரையில் பரவிவரும் 'மெட்ராஸ் ஐ'”