தஞ்சை–பட்டுக்கோட்டை வரை அதிமுக.வினர் மனித சங்கிலி
Posted October 07, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
தஞ்சாவூர், அக். 7–
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று காலை தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை வரை 50 கிலோ
மீட்டர் தொலைவிற்கு 1 லட்சம் பேர் பங்கேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் பரசுராமன். எம்.பி, மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதாரவிசந்திரன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மனித சங்கிலியின் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் கோபால் மயங்கி விழுந்தார். அவரை கட்சியினர் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர்.நன்றி மாலைமலர்
0 comment(s) to... “தஞ்சை–பட்டுக்கோட்டை வரை அதிமுக.வினர் மனித சங்கிலி”