அதிரை அருகே பரவி வரும் காய்ச்சலை தடுக்க களப்பணியாளர்கள் நியமிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

Posted October 15, 2014 by Adiraivanavil in Labels:

: அதிரை அருகே சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் வெகுவாக பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுப்பதற்கு அதிகளவில் களப்பணியாளர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வைரஸ், டைபாய்டு, டெங்கு போன்ற மர்ம காய்ச்சல்கள் பரவி வருகிறது. கொசு மூலம் பரவும் இந்த காய்ச்சலை தடுப்பதற்கு களப்பணியாளர்கள் அதிகளவில் நியமிக்க வேண்டும். சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் அழகியநாயகிபுரம், குருவிக்கரம்பை, பெருமகளூர், ஊமத்தநாடு ஆகிய 4 இடங்களில் அழகியநாயகிபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகிறது. சேதுபாவாசத்திரம் 37 ஊராட்சிகளை
கொண்ட அமைப் பாகும். இந்த 4 ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் மொத்தம் இதுவரை 10 களப்பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். 
தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் கிராம புறங்களில் கொட்டான்குச்சி, டயர், தொட்டிகளை கண்காணிப்பதற்கு களப்பணியாளர்கள் போதுமானதாக இல்லை. எனவே மழை காலம் துவங்குவதை கருத்தில் கொண்டு ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 10 களப்பணியாளர்கள் வீதம் குறைந்தபட்சம்40 களப்பணி யாளர்களாவது நியமனம் செய்தால் தான் பரவி வரும் மர்ம காய்ச்சல்களை கட்டுப்படுத்த முடியும் என்று பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “அதிரை அருகே பரவி வரும் காய்ச்சலை தடுக்க களப்பணியாளர்கள் நியமிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை”