முத்துப்பேட்டை அருகே அ.தி.மு.க. தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
Posted October 07, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை, அக். 7–
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் வடக்காட்டை சேர்ந்தவர் தங்கவேல் மகன் முருகேஷ் (வயது 30). அ.தி.மு.க. கட்சியின் தீவிர தொண்டரான இவர் ஜெயலலிதாவுக்கு தண்டணை விதிக்கப் பட்டதையொட்டி நடந்த
அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.
அ.தி.மு.க. சார்பில் நடந்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார். எடையூரில் அ.தி.மு.க. சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திலும் முருகவேல் கலந்து கொண்டார். உண்ணாவிரதம் முடிந்து மாலையில் வீடு திரும்பிய அவர் இரவு வீட்டு அருகில் உள்ள கீற்றுகொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயலலிதா கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. விவசாய கூலித்தொழிலாளியான அவருக்கு மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.நன்றி மாலைமலர்
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே அ.தி.மு.க. தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை”