அமெரிக்காவில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு விருது

Posted October 23, 2014 by Adiraivanavil in Labels:

அக்.23 உலகம் முழுவதும் உள்ள மக்கள் மின்சாரத்தை சார்ந்துள்ள நிலையில், மின் பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் காற்று தூய்மைக்கேட்டை கருத்தில் கொண்டு மின் பாதுகாப்பு சாதனத்தை சகீல் தோஷி என்ற அமெரிக்க வாழ் இந்திய மாணவர் கண்டுபிடித்து சாதனை படைத்து இருக்கிறார்.அமெரிக்காவின் பித்ஸ்பர்க் பகுதியில் தங்கி இருக்கும் அவர், இந்த சாதனைக்காக ‘அமெரிக்காவின் உயரிய இளம் விஞ்ஞானி’ என்ற புத்தாக்க விருதையும் 25 ஆயிரம் அமெரிக்க டாலரையும் வென்று உள்ளார். இந்த விருதுக்கான இறுதிச்சுற்றில் மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர். இறுதியில், சகீல் தோசிக்கு இந்த விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக விருதினை வழங்கும் டிஸ்கவரி எஜூகேஷன் அமைப்பின் தலைவர் பில் குட்வின் கூறுகையில், ‘‘இளம் விஞ்ஞானி விருதை வென்றுள்ள சகீல் தோசி மற்றும் அவருடன் சேர்ந்து இறுதிசுற்றுக்கு தகுதி பெற்ற நபர்களை அவர்களது அர்ப்பணிப்பு, புத்தாக்க முயற்சிக்காக வாழ்த்துகிறோம். வரும் நாட்களில், இந்த சமுதாயத்தில் அவர்கள் பல அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்’’ என்றார்.

மேலும், அமெரிக்காவின் வெர்ஜீனியா பகுதியை சேர்ந்த இந்திய மாணவர் ஜெய் குமார் என்பவர், காற்று தூய்மைக்கேட்டை தடுப்பதற்காக ஜன்னலில் பொருத்தப்படும் சிறப்பு கருவியை கண்டறிந்தார். இந்த போட்டியில் அவர் 3–வது இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. நன்றி மாலைமலர் 


0 comment(s) to... “அமெரிக்காவில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு விருது”