நேபாள நாட்டின் கல்பதரு சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை
Posted October 23, 2014 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜீவ் சவுமித்ரா இவரது மகன ஹர்ஷித் சவுமித்ரா (வயது 5). நேபாள நாட்டில் உள்ள மிக உயரமான சிகரங்களுள் ஒன்றான கல்பதரு என்ற மலைச்சிகரம் மீது ஏறி உலக சாதனை புரிந்துள்ளார். இவரது தந்தை ராஜீவ் சவுமித்ரா என்பவரும் ஒரு மலையேறும் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்ஷித் சவுமித்ரா, இந்த சாதனையை செய்வதற்காக, அவன் தனது தந்தை மற்றும் 2 வழிகாட்டிகளுடன் கல்பதரு சிகரத்திற்கு சென்றான். கடந்த 7ஆம்தேதி எவரெஸ்ட் மலை முகாம் வரை ஹெலிகாப்டரில் சென்ற ஹர்ஷித் சவுமித்ரா, பின்னர் அந்த இடத்தில் இருந்து 10 நாட்கள் பயணம் செய்து, கல்பதரு சிகரத்தில் ஏறி சாதனை புரிந்தான். பயணத்தின் இடையில் 2 நாட்கள் மட்டும் கூடாரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் பாலாஜி என்ற 7 வயது இந்திய சிறுவன் கல்பதரு சிகரத்தில் ஏறியது தான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 5 வயது ஹர்ஷித் முறியடித்துள்ளான். இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது.நன்றி மாலைமலர்
0 comment(s) to... “நேபாள நாட்டின் கல்பதரு சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை”