அதிரையில் ஊதுபத்தி தயாரிக்க பயன்படும் சங்கு நாகனம்; வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி (படங்கள் இணைப்பு)
Posted October 15, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடல் சங்கில் இருந்து எடுக்கப்படும் நாகனம் என்ற உறுப்பு கிலோ ரூ10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நாகனம் ஊதுபத்தி தயாரிக்க பயன்படுகிறது. தஞ்சைமாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் மறவக்காடு வெளிவயல் ஆகிய துறைமுக பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றனர் மீன்பிடித்து வரும் மீனவர்கள் வலையில் சங்குகள் சிக்குகின்றன, அதில் இருந்து கறியை மட்டும் எடுத்துக்கொள்கின்றனர் மீனவர்கள் இந்த சங்கு மற்றும் சங்கில் இருந்து எடுக்கப்படும் சங்குநாகனம் என்ற உறுப்பை சங்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர், சங்கு வியாபாரிகள் சங்கை கொல்கத்தா பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர், கொல்கத்தாவில் சங்கிலிருந்து பலவகை ஆபரணங்கள் செய்கின்றனர், மேலும் சங்கில்
இருந்து எடுக்கப்படும் சங்கு நாகனத்தை உயர் வகை ஊதுபத்தி தயார் செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கின்றனர் வெளிநாடுகளுக்கு ஏற்றமதியாகிறது, இந்த சங்குகள் இனபெருக்கம் செய்வதற்க்கு அதிராம்பட்டினம் கடல்பகுதியில் அலையாத்திகாடுகள் மற்றும் சேற்று மணல் பகுதி என்பதாலும் இனப்பெறுக்கம் செய்துவிட்டு ஆழ்கடலுக்கு சென்றுவிடுகிறது ஆழ்கடலுக்கு செல்லும் போதுதான் மீனவர்கள் வலையில் சிக்குகின்றது, இதுபற்றி சங்கு வியாபாரிகள் கூறுகையில் மீனவர்கள் வலையில் சங்குகள் அதிகமாக பிடிபடாது. ஒரு வலையில் 7 அல்லது 9 சங்குகள் வரை பிடிபடம் சங்கில் உள்ள சங்குநாகனம் என்ற உறுப்பு ஒரு கிலோ எடுப்பதற்கு 600 சங்குகள் தேவைப்படுகிறது. மீனவர்கள் சிலபகுதிகளில் சங்குநாகனத்துக்கு பல பெயர்களும் உண்டு சங்கு நாக்கு என்று கூட மீனவர்கள் ஆழைப்பார்கள் இந்த சங்குகளில் ஒரு சங்கில் ஒரு நாகனம்தான் இருக்கும் உயர்வகை பத்தி தாயர் செய்யும் நிறுவனங்கள் அதிராம்பட்டினம் பகுதிக்கு வந்து நாகனங்களை வாங்கி செல்வார்கள் மேலும் மருந்து தயார் செய்வதற்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார்கள். தொகுப்பு அதிரைவானவில்0 comment(s) to... “அதிரையில் ஊதுபத்தி தயாரிக்க பயன்படும் சங்கு நாகனம்; வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி (படங்கள் இணைப்பு)”