மல்லிபட்டினத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
Posted October 11, 2014 by Adiraivanavil in Labels: mallipattinam![]() |
இரட்டைமடி வலை, சுருக்கு மடிவலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மல்லிபட்டினத்தில் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் சங்க செயலாளர் எஸ். சுப்பிரமணியன்
தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில செயலாளர் கே.எம். லிங்கம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், இரட்டை மடிவலை, சுருக்கு மடிவலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் நல வாரியத்தை அமைத்து முறையாக தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். 60 வயதை கடந்த ஆண், பெண் மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் விடுபட்ட மீனவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி சுனாமி வீடு கட்டி தரவேண்டும். மாவட்ட ஆட்சியர் மீனவர் குறைதீர்ப்பு மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும். இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட வலைகள், படகுகள் ஆகியவற்றை திரும்ப பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.நன்றி தினமணி
0 comment(s) to... “மல்லிபட்டினத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்”