பட்டுக்கோட்டை காவல்நிலைய டெலிபோன் டவரில் ஏரி ஒருவர் தற்கொலை முயற்சி
Posted October 14, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில் காந்தி சிலை அருகே தேவர் உணவகம் நடத்தி வரும் கருப்பையா என்பவரது கடையை , நேற்று இரவு பந்தோபஸ்திற்கு சென்ற 10க்கும் மேற்பட்ட போலீஸார்
தீபாவளியை முன்னிட்டு இரவு நேரம் சற்று கூடுதலாக கடையை நடத்திக்கொள்ள வர்த்தக சங்கம் சார்பில் சமீபத்தில் நடத்த ஆர்.டி ஓ தலைமையிலான கூட்டத்தில் அனுமதிக்கேட்கப்பட்ட சூழ்நிலையில் போலீஸார் இரவு நேரங்களில் அடாவடியாக கடைகளில் உள்ள சாமான்களை போட்டு உடைப்பதும் கடைக்காரர்களை அடிப்பதும் வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி கேட்கப்பட்டும் தாக்குதல் நடத்தும் போலீஸாரிடம் பேசுவதற்கு கூட வர்த்தக சங்கம் வரவில்லை என்பது பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் குறையாக இருக்கிறது என பொதுமக்கள் கூறுகின்றனர். தன்னை தாக்கிய காவல்துறையினர் தன்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை இறங்க மாட்டேன் என பலமணி நேரமாக டவரின் உச்சியில் தீப்பட்டி மற்றும் மண்ணெண்னையுடன் அந்தநபர் நிற்கிறார்.
பட்டுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் மற்றும் தீயனைப்புத்துறையினர் செய்வதறியாது டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த நபர் கையில் பெட்ரோல் வைத்து இருப்பதால் டெலிபோன் டவருக்கான கதிர்வீச்சின் மூலம் அது பற்றி எரிய அதிக வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீயனைப்புத்துறையினரிடம் வேண்டுகோல் விடுத்தனர்.
நன்றி - பட்டுக்கோட்டை நியுஸ்டைம்
0 comment(s) to... “பட்டுக்கோட்டை காவல்நிலைய டெலிபோன் டவரில் ஏரி ஒருவர் தற்கொலை முயற்சி”