பேராவூரணியில் பலத்த மழை:இடி தாக்கி பெண் சாவு
Posted October 11, 2014 by Adiraivanavil in Labels: பேராவூரணி
பேராவூரணி பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. அப்போது, இடிதாக்கியதில் பெண் உயிரிழந்தார்.அந்தமான் அருகே உருவாகியுள்ள தீவிர புயலின் காரணமாக, தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது.பேராவூரணி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் திடீரென பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது.இதனிடையே, பேராவூரணி அருகேயுள்ள மேற்பனைக்காட்டைச் சேர்ந்த முருகையன் மனைவி செல்வராணி (54). இவர் வெள்ளிக்கிழமை படப்பனார்வயல்
கிராமத்திற்கு நடவு வேலைக்கு சென்றிருந்தார். மழை பெய்ததால் வயலுக்கு அருகிலுள்ள தென்னை மரத்தடியில் ஒதுங்கியபோது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பேராவூரணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.நன்றி தினமணி
0 comment(s) to... “பேராவூரணியில் பலத்த மழை:இடி தாக்கி பெண் சாவு”