அதிராம்பட்டினம் அலையாத்தி காட்டிற்கு வெளிநாட்டு பறவைகள்; தஞ்சம் (படங்கள்இணைப்பு)
Posted October 29, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை கடற்பகுதியான அதிராம்பட்டினத்திலிருந்து அலையாத்தி காடுகள் துவங்கி முத்துப்பேட்டை
வழியாக தொண்டியக்காடு வரைக்கும் சுமார் 70 கிலோ மீட்டர் தூரம்
வரை கடற்கரை ஒரத்தில் சதுப்பு
நிலப்பகுதிகளில் அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன.இதில்
அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளில்
பல நூற்றாண்டு மரங்களும் உயரமாகவும் அடர்த்தி மிகுந்த காடாகவும் உள்ளது
அதோடு புவியல் அமைப்பில் ஈரப்பதம்
அமைந்த காடு என்று ஆராய்ச்சில்
குறிப்பிட்டுள்ளது.அதனால்தான் வெளிநாடுகளிலிருந்து அதவது சைபிரியா ஆஸ்திரேலிய
இந்தோனேசியா இலங்கை மலேசியா பாகிஸ்தான்
இங்கிலாந்து மத்திய ஆசியா ரஷ்யாவின்
வடபகுதி மற்றும் ஐரோப்பா என
25க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து செங்கால் நாரை குளக்கிடா கடல்ஆழா
மையில்கால் கோழி பனங்கொட்டை சிறவி
பாம்புதாரா நத்தகொத்திநாரை பவளக்கால் உள்ளான் பூநாரை சாம்பல்நாரை
நாமக்கோழி வெள்ளைகொக்கு என பல வகையான
பறவைகள் அலையாத்தி காடுகளுக்கு வருகை வந்துள்ளன. இதையடுத்து
அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டுப்பகுதிக்கு ஒவ்வொருவருடம் மழைகாலங்களில் வெளிநாடுகளிலிருந்து பறவைகள் இங்குவருவது வழக்கம்
அதாவது நவம்பர் மாதத்திலிருந்து வெளிநாட்டுப்பறவைகள்
இங்கு வரத்துவங்கும் இந்த நாட்கள் குளிர்காலங்கள்
என்hதால் டிசம்பர்.ஜனவரி
மாதங்கள் வரை இந்த பறவைகள்
தங்கிவிட்டு கோடைகாலம் துவங்குவதற்கு முன் பறவைகள் திரும்பிச்
சென்றுவிடும் இந்தநிலையில் சமீபகாலங்களாக மழை தொடந்து பெய்துவருவதால்
தற்போது அலையாத்திக்காடுகளில் உள்ள நீர் நிலைகளில்
தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.மேலும் எப்போதும் இந்தப்பகுதி
குளிர்ந்த நிலையில் இருந்துவருவதால் வெளிநாட்டுப்பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய இவை பெரிதும்
உதவுகின்றன இப்பறவைகள் காலையில் சூரியன் தொடங்குவதற்க்கு முன்னால்
இரை தேட ஆரம்பித்து விடும்
இதனையடுத்து ஆறுகள் குளம் குட்டை
ஏரிகள் ஆகிய பகுதிகளில் நண்டு
நத்தை இறால் வயல்களில் நெல்கதிர்கள்
நீர் வாழ் புழப் பூச்சிகள்
போன்றவைகளை உணவாக உட்கொள்கிறது.
மேலும் அதிராம்பட்டினம்
அலையாத்திக்காடுகளை ஒட்டி கடல்கரை துறைமுகபகுதியில்
உள்ள மீனவர்கள் சிறிய
மீன்களை வாய்களில் கொட்டுகின்றனர் இதை உணவாக உட்கொள்ள
அனைத்து வெளிநாட்டு பறவைகள் பல்வேறு நாட்டிலிருந்து
வருகை தந்துள்ளது. இந்த பறவைகள்; பலவித
ஒலிகள் எலுப்புவதால் பொதுமக்கள்
மகிழ்ச்சி; அடைந்துள்ளனர்.தொகுப்பு அதிரைவானவில் ஆசிரியர் அப்துல்ரகுமான்
0 comment(s) to... “அதிராம்பட்டினம் அலையாத்தி காட்டிற்கு வெளிநாட்டு பறவைகள்; தஞ்சம் (படங்கள்இணைப்பு) ”