அதிரை அருகே புயல் எதிரொலி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

Posted October 21, 2014 by Adiraivanavil in Labels:

அதிரை அருகே சேதுபாவாசத்திரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் புயல் எதிரொலியால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் உள்ளன. இந்த படகுகள் மூலம் திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்வது வழக்கம்.இதனிடையே, வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்றழுத்த சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த வாரம் 4 நாட்கள் மழை பெய்தது. அத்துடன் வடகிழக்குப் பருவ மழையும் கடந்த 18ம் தேதி முதல் பெய்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் அடை மழை நீடிக்கிறது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக நேற்று கடலுக்குச் செல்ல வேண்டிய விசைப்படகு மீனவர்களுக்கு மீன்வளத் துறையினரால் வழக்கம்போல் வழங்கக்கூடிய அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக சேதுபாவாசத்திரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அவர்கள் வீட்டி லேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மே லும், புயல் எதிரொலியாக இப்பகுதிகளில்  கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக உள்ளது. இதனால் சுமார் 1500 விசைப்படகு மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் விசைப்படகு மீன்பிடிக்கச் செல்லக்கூடிய மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.நன்றி தினகரன் 


0 comment(s) to... “அதிரை அருகே புயல் எதிரொலி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை”