முத்துப்பேட்டை அருகே கணவர் மதுபழக்கத்தை விடாததால் மனைவி தற்கொலை

Posted October 18, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை, அக் 18–
முத்துப்பேட்டை அருகே உள்ள செந்தாமரைகண் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாரதி. இவரது மனைவி நிரோஷா (வயது 25). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
பாரதி மதுக்குடிக்கும் பழக்கம் உடையவர். தினமும் மது குடித்துவிட்டு மனைவி நிரோஷாவுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த நிரோஷா கடந்த 14– ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து
மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அவர் இறந்தார்.
இது குறித்து நிரோஷாவின் தாய் மல்லிகா பெருகவாழந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ. சுப்பு விசாரணை நடத்தி வருகிறார் நன்றி மாலைமலர் 


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே கணவர் மதுபழக்கத்தை விடாததால் மனைவி தற்கொலை”