அதிரையில் குடி நீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முன் முற்றுகை

Posted October 07, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் 8வது வார்டைச் சேர்ந்தது கடற்கரைத் தெரு பகுதியாகும் இந்தப்பகுதிக்கு கடந்த சில தினங்களாக குடி நீர் சப்ளை சரிவர செய்யப்படவில்லைஎன கூறப்படுகிறது இதுபற்றி பல முறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை  என கூறி பசீர் அகமது தலைமையில் அல்அமீன் மற்றும் ஜஹபர்அலி முன்னிலையில் கடற்கரைத்தெரு இளைஞர்
மன்றத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டனர் இது பற்றி தகவலறிந்ததும் அதிராம்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் பசுபதி சம்பவ இடத்துக்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர் இருந்தும் பேச்சு வார்த்தையில் உடன் பாடு எட்டப்படவில்லை தொடர்ந்து இளைஞர்கள் பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் வாக்கவாதத்தில் பட்டனர் இந்த முற்றுகையினால் பேரூராட்சி அலுவலகப்பணிகள் பாதிக்கப்பட்டன



0 comment(s) to... “அதிரையில் குடி நீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முன் முற்றுகை ”