முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
Posted October 11, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 54 மாணவிகளின் கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன. அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் குமாரசாமி கண்காட்சியை துவக்கி வைத்தார். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துக்கொள்ள நடைபெறும் தேர்வுக்காக சென்னை அக்னி கல்லூரி பேராசிரியர் விஜயகுமார் தலைமையில் குழுவினர் மாணவிகளின் கண்டுபிடிப்புகளை நேரில் பார்வையிட்டு, அதன் விளக்கத்தை கேட்டறிந்து தேர்வு செய்தனர். இதில் ஜுனியர் அளவில் மாணவி பர்கத் ஜப்ரீன் உருவாக்கிய சோலார் ஓவன், மாணவி ஜனனி உருவாக்கிய மூலிகை கொசு ஒழிப்பான் கருவிகளும், சீனியர் அளவில் மாணவி அல்பியா சுல்தானா உருவாக்கிய காஸ் வெளியேற்றும் கருவி, மாணவி சர்லிடி இமாக்குலேட் உருவாக்கிய ஒயர்லக்ஸ் கருவி ஆகிய நான்கு கருவிகளையும் தேர்வு செய்தனர். பின்னர் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை டாக்டர் காஜா முகைதீன் வழங்கி பேசினார். இதில் பள்ளி முதல்வர் சகுந்தலா, உதவி முதல்வர் உமா மகேஸ்வரி, ஆசிரியைகள் வினோதா, ஜெயகிருஷ்டி, ராஜலெட்சுமி, ராஜேஸ்வரி, அருணா, மணிமலா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி”