டயட் இருக்கும் போது தவிர்க்கவேண்டிய உணவுப் பொருட்கள் – ஆரோக்கிய அலசல்

Posted February 22, 2015 by Adiraivanavil in Labels:


டயட் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் – இது ஆரோக்கிய அலசல்

உடல் எடையை குறைக்க தீவிரமாக பல முயற்சிக ளை
எடுத்துக் கொண்டிருக்கும் போது சில உணவுப் பொருட்களை தவிர்க்க
வேண்டியது அவசியமாகிறது. தற் போது உடல் எடையை குறைக்க பலரும் சிரமப்படுகின்றனர். சில தினங்கள் வாயை கட்டிப்போட்டு வைத்தாலும், தெருக்களில் விற்கு ம் உணவுப் பொருட்களை வாரம் ஒரு முறையாவது வாங்கி சுவைத்து விடுகிறார்கள்.
இதன்காரணமாக உடல் எடையை குறைக்க எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போய் விடு ம். அந்த வகையில் டயட் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவு ப்பொருட்களை பற்றி பார்க்கலா ம்.
பிஸ்கட்
உங்களுக்கு பிஸ்கட் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக் கலாம். ஆனால் பிஸ்கட்டுகளை அளவுக் கு அதிகமாக சாப்பிடும் போது, அதுவும் உடல் எடையைக் குறைக்க தடையை ஏற்படுத்தும்.

க்ரனோலா
க்ரனோலா பாரில் கலோரிகள் அதிகளவில் நிறைந்துள்ளது. ஆக வே எடையைக் குறைக்க கடுமை யான முயற்சியில் ஈடுபட்டிருக்கு ம் போது க்ரனோலா பார் உட் கொ ண்டால், அது எடையைக்குறைக்க விடாமல் தடுக்கும், ஆகவே இதனை தவிர்க்க வேண் டும்.

பொரித்த மசாலா சிப்ஸ்
சுவையான இந்த மசாலாக்கள் சேர்க்கப்பட்ட சிப்ஸ்க 
ளை டயட்டில் இருக்கும் போது உட்கொண்டுவந்தால், அது உட லில் கலோரிகளின் அளவை அதிகரித்து, உட ல் எடையைக் குறைப்பதில் இடையூறை ஏற் படுத்தும், எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை கலந்த தயிர்
சிலருக்கு தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிட மிகவும் 
பிடிக்கும். ஆனால் இந்த செய லை டயட்டில் இருக்கும் போ து பின்பற்றக்கூடாது. ஏனெனி ல் சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைப்பதோடு, அதனை தயி ருடன் சேர்த்து உட்கொண்டால், எடையைக் குறைக்க தடையை ஏற் படுத்தும்.

ஸ்மூத்தி ஜூஸ்
ஸ்மூத்தி ஜூஸ் குடிப்பது ஆரோக் கியம்தான். ஆனால் அதனை டயட்டில் இருக்கும்போது அளவுக் கு அதிகமாக குடிப்பது நல்லதல் ல. மேலும் இந்த வகையான பான ங்கள் நம்மை அதற்கு அடிமைப் படுத்திவிடும்.

சோடா
தற்போது கார்போனேட்டட் பானங்களான சோடாக்க
ளைபருகுவோரின் எண்ணிக் கை அதிகரித்துள்ளது. இவற் றை பருகுவதே மிகவும் ஆபத் து, அதிலும் எடையைக் கு றைக்கும் போது பருகினால், உடலின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படுமே தவிர, எடை குறையாது என்பதை நினை வில் வைத்துக் கொள்ள வே ண்டும்.

வாழைப்பழ சிப்ஸ்
சி
லர் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதை விட, வாழைப்பழ சிப்ஸ் சாப்பிடுவது நல்லது என்று சொல்வார்கள். ஆனால் வாழைப் பழ சிப்ஸ் கூட எண்ணெயில் பொ ரிப்பதால், இதுவும் ஆரோக்கியம ற்றது.

உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ்
நட்ஸ்சாப்பிடுவது ஆரோக்கியம்தான் . ஆனால் உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ் சாப்பிடுவது நல்லதல்ல. அதிலும் டய ட்டில் இருக்கும் போது சாப்பிடுவது முற்றிலும் பலன் தராது.

பாலகிருஷ்ணன்


0 comment(s) to... “டயட் இருக்கும் போது தவிர்க்கவேண்டிய உணவுப் பொருட்கள் – ஆரோக்கிய அலசல்”