முத்துப்பேட்டை அடுத்த வேப்பஞ்சேரி கிராமத்தில் அரசு
நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு நேற்று ஏராளமான லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் வந்து இறங்கி கொண்டிருந்தது. அப்பொழுது திருத்துறைப்பூண்டி மன்னை சாலையில் வசிக்கும் லாரி டிரைவர் செல்வராஜ்(40) என்பவர் நேற்று மாலை தனது லாரியில் ஏராளமான நெல் மூட்டைகளில் ஏற்றி கொண்டு நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது அதிகளவில் லாரிகள் வந்திருந்ததால் எடை போடுவதில் காலத்தாமதம் ஏற்பட்டது. அதனால் நெல் மூட்டைகளோடு லாரியை கொள்முதல் நிலையத்துக்குள் நிறுத்திவிட்டு அங்கிருந்து ஒரு பைக்கில் நேற்று மாலை லாரி டிரைவர் செல்வராஜ் ஊருக்கு திரும்பினார். அவர் கள்ளுக்குடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திருத்துறைப்பூண்டியிலிருந்து பேராவூரணி செல்லும் அரசு பேருந்து ஒன்று எதிர்பாரா விதமாக அவர் மீது நேரடியாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லாரி டிரைவர் செல்வராஜ் தலை நசுங்கி பலியானார். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு எடையூர் இன்ஸ்பெக்டர் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானபண்டிதர், தலைமை காவலர் பாலாஜி உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்கு வரத்தை சரி செய்து பலியான டிரைவர் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு காரணமான அரசு பேருந்தை போலீசார் பறிமுதல் செய்து எடையூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இது இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியது.
படம்செய்தி
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை