அதிரையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இன்று 67வது பிறந்த நாள் விழா-(படங்கள் இணைப்பு)

Posted February 24, 2015 by Adiraivanavil in Labels:
 அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான
ஜெயலலிதாவுக்கு இன்று 67வது பிறந்த நாளாகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மற்றும் அன்னதானம், ரத்ததானம் போன்றவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளில் அதிமுகவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அவரது கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றார்கள். இந்த ஆண்டும் ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில்  அ.தி.மு.கவினர் நகர செயலாளர் பிச்சை தலைமையில் கொடியேற்றி  அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது .இதில் அதிமுக நகர  துணைச்செயலாளர்  தமீம்  வார்டுகவுன்சிலர்கள் சிவக்குமார்  சேனா மூனா   அபூதாகிர் அப்துல் லத்தீப் அதிமுக கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்











0 comment(s) to... “அதிரையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இன்று 67வது பிறந்த நாள் விழா-(படங்கள் இணைப்பு) ”