முத்துப்பேட்டை அருகே கையால் வரைந்த காந்தி படத்துக்கு மாணவர்கள் அஞ்சலி.
Posted February 02, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
துவக்கப்பள்ளியில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தங்கபாபு தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் தலைமை ஆசிரியர் தங்கபாபு வரைந்த காந்தி படத்திற்கு மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கிராம கல்வி குழுத் தலைவர் சாந்தி, ஆசிரியர் ஜெயகண்ணன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே கையால் வரைந்த காந்தி படத்துக்கு மாணவர்கள் அஞ்சலி.”