துபாயில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் [ படங்கள் இணைப்பு ]

Posted February 22, 2015 by Adiraivanavil in Labels:

துபாயில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்துபாய்: துபாயில் அம்மா பேரவையின் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 67வது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை
மதியம் அன்சார் கேலரி சுவாகத் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு ஐக்கிய அரபு அமீரக டாக்டர் புரட்சித்தலைவி அம்மா பேரவையின் நிர்வாகி கே.சி. சக்திவேல் தலைமை வகித்தார். வெம்புலி ஆர். நெடுஞ்செழியன் வரவேற்புரை நிகழ்த்தினார். பி. பாபு, எம். சாகுல்ஹமீது, எஸ்.சரவணன், எம். ராமலட்சுமி, மந்திரி என்ற ராஜு, பி. சதீஷ், ஏ. கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயராணி, கவிஞர் ஜெயராமன் ஆனந்தி மற்றும் கவிஞர் மா. யமுனாலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர். பாலு நன்றியுரை நிகழ்த்தினார். விழாவில் கே.கண்ணன், பி.பழனிமுத்து, என். துரைசாமி, ஆர். செல்வகுமார், குமாரசாமி, ஏ. ஆறுமுகம், மெய்யநாதன், ஏ. அருணா, ஜி. செல்வகுமார், பாஸ்கர், செல்லதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா நிகழ்ச்சிகளை நிவேதிதா தொகுத்து வழங்கினார். பிறந்தநாளையட்டி பர்துபாய் கோவிலில் 67 கிலோ அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக விழாவின் தொடக்கத்தில் 67 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஜெயலலிதா போல் உடையணிந்து வந்த சிறுமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வெகுவாகக் கவர்ந்தார். நிகழ்ச்சியில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது.

துபாயில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

துபாயில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


துபாயில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


துபாயில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்







0 comment(s) to... “துபாயில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் [ படங்கள் இணைப்பு ] ”