நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய காரை தயாரிக்கிறது இந்திய நிறுவனம்

Posted February 06, 2015 by Adiraivanavil in Labels:

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்பாண்ட் படங்களைத் தவிர்த்து நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய காரை நாம் நேரில் பார்த்திருக்கிறோமா? தந்போது இந்தியாவில் இதுபோன்ற ஒரு காரினை கோவாவைச் சேந்த இந்திய நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது.


ஆம்பியஸ் டிசைன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (amphibious Designs India Pvt Ltd ) ஆட்டோமொபைல் கார்ப்பரேசன் கோவா நிறுவனத்துடன் இணைந்து நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய காரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த மாதத்தில் இருந்து புதுமையாக இந்த வாகனத்தை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.. முதற்கட்டமாக இரண்டு கார்களை வரும் மே மாதம் டெலிவரி செய்ய ஆம்பியஸ் டிசைன்ஸ் இந்தியா  திட்டமிட்டுள்ளது.
இந்த காருக்கான 80 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே வாங்கப்பட்டுள்ளன. ஆம்பியர் டிசைன்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் சுற்றுலா துறையை கருத்தில் கொண்டு இந்த வாகனத்தை தயாரித்துள்ள நிலையில், படிப்படியாக மாநில போக்குவரத்து மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அவசர கால பகுதிகளுக்காக தயாரிக்க விரும்புகிறது..
இந்றுவனத்தின் இயக்குனரான துர்கா ஸ்ரீநிவாஸ் தல்லமராஜ், கூறுகையில், ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்டப 8 நாடுகளில் ஆம்பியஸ் கார்களை உற்பத்தி செய்துவரும், எங்களது அமெரிக்க கூட்டாளிகளிடம் உற்பத்தி தொடர்பான தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்துள்ளோம். என்றார்.


0 comment(s) to... “நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய காரை தயாரிக்கிறது இந்திய நிறுவனம்”