தஞ்சை பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் அனுமதி
Posted February 22, 2015 by Adiraivanavil in Labels: தஞ்சை
பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட தஞ்சை பெண்ணுக்கு அரசு மருத்துவமனை தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சண்முகாநகரை சேர்ந்தவர் அற்புதசாமி. இவருடைய மனைவி மோலிமேரி (வயது37). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சென்னைக்கு உறவினர் வீட்டிற்கு சென்று வந்தார். அதன்பிறகு அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் காய்ச்சல் குறையவில்லை.
இதனால் அவருக்கு ரத்த பரிசோதனை செய்ய டாக்டர் குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி மோலிமேரியின் ரத்தம் திருச்சியில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது.
அதன் மருத்துவ அறிக்கையை பார்த்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் உடனே மோலிமேரியை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உடனே மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் சங்கரநாராயணன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், மோலிமேரியை தனிவார்டில் அனுமதித்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நல்லநிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் சங்கரநாராயணன் கூறும்போது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோலிமேரி பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்ப கட்ட நிலையில் உள்ளபோதே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மூலம் குணமடைந்து வருகிறார்.
மேலும் மோலிமேரியின் குடும்பத்தில் உள்ளவர்களில் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறதா? என்றும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் முதன்முதலில் பெண்ணுக்கு பன்றிகாய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பணியில் டாக்டர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி மாலைமலர்
0 comment(s) to... “தஞ்சை பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் அனுமதி”