பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவியை கம்பால் தாக்கிய தலைமை ஆசிரியர். பரபரப்பு.

Posted February 04, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை கோவிலூர் பைப்பாஸ் சாலையில் வசிப்பவர் பாய் வியாபாரி ராஜீ(40). இவரது மனைவி சித்திரா(35). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சிவா(13), சென்பகவல்லி(11) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. இருவரும் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்;து வருகின்றனர். இதில் சிவா 8-ம் வகுப்பும், சென்பகவள்ளி 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற இருவரும் காலதாமதமாக சென்றதால் பள்ளியின் வெளியே நிறுத்தப்பட்டனர். அது போல் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதே காரணத்திற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். பின்னர் நீண்ட
நேரம் கழித்து வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரிசையாக நிற்கவைத்து கம்பால் கையில் அடித்துள்ளார். இதில் மாணவி சென்பகவள்ளி வலித்தாங்க முடியாமல் அழுதுக்கொண்டே வகுப்புக்கு சென்று சேர்வாக அமர்ந்தாள். பின்னர் மதியம் மாணவிக்கு கையில் வீக்கம் ஏற்பட்டதால் சாப்பிட முடியாமல் துடித்துள்ளார். இதனை பள்ளியின் தலைமை ஆசிரியரோ மற்ற ஆசிரியர்களோ கண்டு கொள்ளவில்லை. அப்பொழுது தங்கையைப் பார்க்க வேறு வகுப்பிலிருந்து வந்த அண்ணன் சிவா, அழுது கொண்டிருந்த தங்கைக்கு சாப்பாட்டை ஊட்டிவிட்டான். பின்னர் வலியால் துடித்த தங்கையை அருகே உள்ள அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு பரிசோதித்து சிகிச்சை அளித்த டாக்டர் மாணவி சென்பகவள்ளியின் கையை எக்ஸ்ரே எடுக்கவேண்டும். அதனால் உனது தந்தையை அழைத்து வரும்படி கூறியுள்ளார். பின்னர் மாணவி சென்பகவள்ளியை பள்ளிக்கு மீண்டும் அழைத்து சென்ற அண்ணன் சிவா, தலைமை ஆசிரியரிடம் விபரங்களை கூறியுள்ளான். இதனையும் தலைமை ஆசிரியர் கண்டு கொள்ளவில்லை. அதனை அடுத்து வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி விட்டதும் அழுது கொண்டே மாணவி சென்பகவள்ளி வீடு திரும்பினாள். இதனை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து மாணவி சென்பகவள்ளி கூறுகையில்: நான் காலையில் எழுந்து சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு நடந்தே சென்வேன். தூரமாக இருப்பதால் தினமும் கொஞ்சம் லேட்டாகும். இன்னைக்கு அதே போல் லேட்டாக போனதால் தலைமை ஆசிரியர் அய்யா என்னை கம்பால் அடித்தார். வலித்தாங்க முடியாமல் அழுதேன். யாரும் என்னை எதுவும் விசாரிக்கவில்லை. அண்ணன் தான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றான். எனது கையை தூக்க முடியவில்லை என்று கூறி அழுதாள். இது குறித்து தந்தை ராஜீ கூறுகையில்: எனது பிள்ளையை தலைமை ஆசிரியர் தாக்கி உள்ளார். எனக்கு ஆதரவு யாருமில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை என்றார். இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது மாணவி தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்



படங்கள் செய்திகள்
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவியை கம்பால் தாக்கிய தலைமை ஆசிரியர். பரபரப்பு.”